முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

புதன்கிழமை, 7 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : தவறுகளில் இருந்து இந்திய அணி வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

முத்தரப்பு தொடர்...

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே டி-20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கையும் நேற்று முன்தினம் மோதின. இப்போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கற்றுக்கொள்வார்கள்

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இந்திய அணி வீரர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றார். ரோகித் சர்மா மேலும் கூறுகையில், “  இந்த போட்டியின் முலமாக எங்கள் வீரா்கள் தங்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வா்கள். இலங்கை அணியின் வெற்றிக்கான அனைத்து பெருமைகளும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களையே சாரும். 175 ரன்கள் என்பதை வெற்றிக்கான ரன்களாக நாங்கள் கருதினோம்.

சிறப்பான ஆடுகளம் ...

இறுதி கட்டத்தில் இன்னும் வேகத்தை நாங்கள் அதிகரித்து இருக்கலாம். ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. இது போன்ற ஆடுகளங்களில் பேட்டிங்கை மிகவும் வலுவாக வெளிப்படுத்துவது அவசியம். பந்து வீச்சை பொறுத்தவரை, எங்கள் அணியின் பந்து வீச்சு வரிசையில் போதிய அனுபவம் இருந்ததாகவே நான் நினைக்கிறேன். இது போன்ற சூழல்களில் விளையாடிய அனுபவம் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு போதிய அளவில் இருந்தது” என்றார்.  இதே மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் 2-வது டி-20 லீக் போட்டியில், இந்திய அணி வங்காளதேச அணியை எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து