முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் ஆய்வு

புதன்கிழமை, 7 மார்ச் 2018      அரியலூர்
Image Unavailable

 

அரியலூர் மாவட்டம், அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் நேற்று (07.03.2018) நேரில் பார்வையிட்டார்.

11ம் வகுப்பு தேர்வு

 தமி;ழகத்தில் முதல்முறையாக 11ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதைத்தொடர்;ந்து, இன்று நடைபெறும் 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு 07.03.2018 முதல் 16.04.2018 வரை நடைபெற உள்ளது. அத்தேர்வில் 76 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ . மாணவிகள் 30 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இதில் 3802 மாணவர்களும், 4827 மாணவிகளும் ஆக மொத்தம் 8629 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

 மேலும், 11-ம் வகுப்பு தேர்விற்கான வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 3 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளைம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு, ஆயுதம் தாங்கிய காவலர்களின் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள நியமன செய்யப்பட்டுள்ளன.

தேர்வுப்பணிகள் சார்ந்து தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மாணவ மாணவிகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பேருந்து வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் உட்பட போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர்..புகழேந்தி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து