முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி சுற்றுலாத்துறையின் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு சுற்றுலா பயணம் : கலெக்டர் கு.ராசாமணி தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை கலெக்டர் கு.ராசாமணி. நேற்று(08.03.2018) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

 விழிப்புணர்வு சுற்றுலா

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பண்டைய தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, பண்பாடு, நம்கலாச்சாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று(08.03.2018) 7, 8, 9 ஆம் வகுப்பு படிக்கும் 150 பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒரு நாள் சுற்றுலாவாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வரலாற்று புகழ்மிக்க இடங்களான நார்த்தாமலை, அரசு அருங்காட்சியகம், திருமயம்கோட்டை, சித்தன்னவாசல் ஆகிய இடங்களை பார்வையிட பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலாத்துறையின் மூலம் விழிப்புணர்வு சுற்றுலா நடத்திட ரூபாய் 2 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து செல்வதன் மூலம் பண்டைய கால வரலாற்றுச் செய்திகள், ஒவியங்கள், கல்வெட்டுகள், நினைவு சின்னங்கள், ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமையும். பள்ளி மாணவ, மாணவியர்கள் இது போன்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பஷீர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மண்டல மேலாளர் இமயவரம்பன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவக்குமார், உதவி சுற்றுலா அலுவலர் ஷகிலாநஸ்ரின் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து