முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து குழுமத்தை காணொளிக்காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 8 மார்ச் 2018      அரியலூர்
Image Unavailable

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, விழுப்புரம், அரியலூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 5-மாவட்டங்களில் செயல்பட உள்ள தேசிய ஊட்டச்சத்து குழுமத்தை டெல்லியிலிருந்து முதற்கட்டமாக காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமி, கலந்துகொண்டார்.

துவக்கி வைத்தார்

இந்த தேசிய ஊட்டச்சத்து குழுமம் குறிப்பாக குழந்தைகளின் முதல் 1000 நாட்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்துவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஒரு தாயின் கர்ப்ப காலம் - 270 நாட்கள் மற்றும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் ஆறு மாதங்களான 180 நாட்களுடன் 6-மாதத்திலிந்து குழந்தையின் 2 வயது வரையிலான - 550 நாட்கள். இவையே மொத்தம் 1000 நாட்களாகும். குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டில் கவனம் வைத்து, பிறப்பு எடையை உயர்த்துதலின் மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதம், தாய்மார்களின் இறப்பு விகிதத்தைக் குறைத்தலுக்கு இத்திட்டம் உதவி புரியும். 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் கவனம் செலுத்தப்பட்டு அங்கன்வாடி மையப் பணிகளை மேடையாக வைத்து அனைத்து வளர்ச்சியினையும் பெற்றிட கவனம் செலுத்தப்படவுள்ளது.

வாழ்க்கை சுழற்சி மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டினைக் குறைத்தல். தேசிய ஊட்டச்சத்து குழுமம் திட்டப் பணியாளர்கள் ஒவ்வொரு செயல்களையும் சரியாகவும், உறுதியாகவும் ஒழுங்கு முறையுடனும், திறன் வளர்த்தலுடனும் திட்டமிட்டு, செயல்படுத்தும் அமைப்பினை நிறுவிட எதிர் நோக்குவதுடன், தேசிய அளவில் 2022 க்குள் 0-6 வயது குழந்தைகளின் குள்ளத்தன்மையை 38.4சதவீதம் லிருந்து 25சதவீதமாக குறைப்பது தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் குழுமத்தின் நோக்கங்களாகும். பிறந்ததிலிருந்து 6 வயதுக் குழந்தைகளிடையே குள்ளத்தன்மையை குறைத்தல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் 2சதவீதம் மூன்றாண்டுகளில் 6சதவீதம் குறைத்தல், பிறந்ததிலிருந்து 6 வயதுக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) குறைத்தல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் 2சதவீதம் வீதம் மூன்றாண்டுகளில் 6சதவீதம் குறைத்தல், 6 மாதத்திலிருந்து 5 வயது வரை உள்ள இளங் குழந்தைகளிடையே இரத்த சோகை தாக்கத்தினை குறைத்தலில் ஒவ்வொரு ஆண்டும் 3சதவீதம் வீதம் மூன்றாண்டுகளில் 6சதவீதம் குறைத்தல், 15 வயதிலிருந்து 49 வயதிற்குட்பட்டோரில் வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்த சோகை தாக்கத்தினை குறைத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் 3சதவீதம் வீதம் மூன்றாண்டுகளில் 6சதவீதம் குறைத்தல், குறைந்த பிறப்பு எடையினை ஒவ்வொரு ஆண்டும் 2சதவீதம் வீதம் மூன்றாண்டுகளில் 6சதவீதம் குறைத்தல் என்பதை இதன் நோக்கமாகச் செயல்பட உள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இக்காணொலி நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.வீ.சி.ஹேமாசந்த் காந்தி, தேசிய தகவல் மைய அலுவலர் ஜான்பிரிட்டோ, மாவட்ட வழங்கல் அலுவலர்(பொ) .பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலர் பூங்குழலி, மாவட்ட திட்ட அலுவலர் பெ.ஜெயராணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து