முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலவர் அதங்கோட்டாசான் சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மாலை அணிவித்து மரியாதை

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோட்டில் உள்ள தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களின் சிலைக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே   மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மலர் தூவி மரியாதை

தமிழ்பெரும்புலவர் அதங்கோட்டாசான் சங்ககால புலவர்களில் தலை சிறந்த ஒருவராவார்.  இவர் விளவங்கோடு தாலுகாவிலுள்ள அதங்கோடு எனும் கிராமத்தில் பிறந்தார்.  இவரின் பெருமையை நினைவுகூறும் வகையில், அதங்கோட்டில் தமிழக அரசின் மூலம்,  ரூ. 65 இலட்சம் செலவில் 8 சென்ட் வளாகத்தில் பீடம் கட்டி, சிலை அமைத்து, மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களால் 29.04.1984 அன்று முப்பெரும் விழா மூலம் திறந்து வைக்கப்பட்டது.  மேலும், இவர் பிறந்த ஊரான அதங்கோட்டில், 15.12.2016 அன்று அரசு விழாவாக நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து, அதங்கோட்டாசான் அறக்கட்டளை சார்பாக, தலைவர்  கொ.கோவிந்தநாதன், துணைத்தலைவர்கள் சே.சாரங்கதரன்,  நாஞ்சில் இராஜபீட்டர்,  துணை செயலாளர் கி.ஐயப்பன் மற்றும் ஜாண் தங்கம் ஆகியோர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில், முஞ்சிறை வட்டார வளர்ச்சி அலுவலர்  அனில் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து