முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீஞ்சூர், ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழா

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்டம், மீஞ்சூர், ஸ்ரீசந்திரபிரபு ஜெயின் கல்லூரியில், பகவான் மகாவீர் கலையரங்கில் மகளிர் தினவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.வாழ்த்துப்பாடலுடன் தொடங்கிய இவ்விழாவில் மகளிர் ஆலோசனைக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.என்.சுஜாதா அனைவரையும் வரவேற்றார்.விழாவிற்கான பாராட்டுரை மற்றும் வாழ்த்துரையை கல்லூரியின் ஆலோசகர் முனைவர்.னு.அமர்சந்த் ஜி வழங்கினார்.

பாராட்டு

மேஜர்.முனைவர்.எம்.வெங்கட்ரமணன், முதல்வர் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியில் மகளிர் பல நிலைகளில் முதன்மை பெற்று வருவதை ஆதாரத்துடன் விளக்கினார்.செயலர்.லலித்குமார் ஓ.ஜெயின் மகளிர் தினவிழாவின் சிறப்புகளை விளக்கினார்;.ஆண்கள் கல்லூரியாக தொடங்கி இருபாலர் கல்லூரியாக விரிவடைந்ததை விரிவாகக் கூறி, இன்று பெண்கள் முதல்வராக,பிரதமராக, ஜனாதிபதியாக வளர்ந்துள்ள பெண்களின் சிறப்பை போற்றி பாராட்டினார்;. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, மாணவிகள் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்களின் சிறப்புத்திறன்களை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் சிறப்பு விருந்தினர் அறிமுகத்தை தொடர்ந்து யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்க்கைத்துறை தலைவர் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையைச் சார்ந்த சு.விஜயலட்சுமி சிறப்பு சொற்பொழிவாற்றி. ‘பெண்கள் தின விழா"வின் சிறப்பை விரிவாக விளக்கினார்;. அவரைத் தொடர்ந்து கௌரவ அழைப்பாளர் பின்னணிப் பாடகர் அறிமுகத்தை தொடர்ந்து ப.ஷைனி பிரபல பின்னணிப் பாடகர் பாரதியாரின் பாடல் பாடி அரங்கத்தை உற்சாகப்படுத்த, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி இணைச் செயலர் ஸ்ரீ பரத் தோஷி, தலைவர் ளுஊPதுநுகு தலைவர் வினய்சந்த் வி.ஷா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்கள், செல்வி.மு.முகில்,உதவிப் பேராசிரியர், ஆங்கிலத்துறை நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் மகளிர் தினவிழா வெகு சிறப்பாக நடந்தேறியது. நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உலக மகளிர் தினத்துக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் இவ்விழாவில் மகளிர் ஆலோசனைக் குழுத்தலைவர்முனைவர்.என்.சுஜாதாஅனைவரையும் வரவேற்றார்.இயக்குநர்.முனைவர்.எஸ்.பாபு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

முதல்வர்.முனைவர்.டி.ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் கல்வி அறக்கட்டளைத் தலைவர்.வினய்சந்த்.வி.ஷா மற்றும் கல்லூரியின் செயலர் லலித்குமார் ஓ.ஜெயின், பொருளாளர் ஜவகர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக, இலட்சியம் எஜீகேர் குழுவின் இயக்குநர், பாரதிய சிக்சா ரத்னா, அரிமா.முனைவர்.எம்.ரஜினி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர் பேசும் போது, பெண்களிடம்,அன்பு,சந்தோசம்,வெற்றி ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்.

பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருக்கும் நிலை மாற வேண்டும்.’நள்ளிரவில் பெண்கள் தனியாக வெளியில் சென்று வரும் நிலை என்று வருமோ அன்றுதான் பெண்களுக்கான உண்மையான விடுதலை" என்ற மகாத்மா காந்தியின் பாடற்கருத்தை எடுத்துக் கூறினார்.பாரதி கண்ட புதுமைப் பெண்களாக பெண்கள் வாழவேண்டும் என்றும் எடுத்துக்கூறினார். அறிவைப் பயன்படுத்தித்தான் மனிதன் வெற்றிப் பாதையில் சென்று இலட்சியத்தை அடைய முடியும். என்று கூறினார்.விழாவையொட்டி கலைப்பண்பாட்டு போட்டிகள் நடைபெற்றதில் வெற்றியாளர்களுக்கு சிறப்புவிருந்தினர் பரிசுகள் வழங்கினார்.விழா முடிவில் உதவிப்பேராசிரியை கே.முகில் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து