மனைவி புகார் எதிரொலி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி, குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      விளையாட்டு
sami 2018 03 09

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமி மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி ஹசின் ஜகான் அளித்த புகார் அடிப்படையில் ஷமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனைவி புகார்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், சமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்தார்.

துன்புறுத்துவதாக...
பின்னர் டிவி சேனலுக்கு ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், சமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயற்சித்ததாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார்.


போலீசில் புகார்...
இதையடுத்து கொல்காத்தாவில் உள்ள லால்பசார் காவல்நிலையத்தில் ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இன்று சமி மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு...
சமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை முயற்சி, காயப்படுத்துதல், கற்பழிப்பு, துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சமி மீதான புகார்களின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் அவரை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து