முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம் 300 ரயில் சேவை முடங்கியதால் மக்கள் அவதி

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மாட்ரிட்: ஸ்பெயினில் பெண்கள் வேலை நிறுத்தம் காரணமாக 300 ரயில்களின் சேவை முடங்கியது.

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் ஸ்பெயின் நாட்டில் பாலின சமத்துவமின்மைக்கு எதிராக பெண்கள் அந்த நாளில் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இந்த 24 மணி நேர வேலை நிறுத்தத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.
இதில் அந்த நாட்டு நடிகையும், மாடல் அழகியுமான பெனிலோப் குருசும் பங்கேற்றார். ஆதரவு இதற்காக அவர் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். இந்த வேலை நிறுத்தத்துக்கு அங்கு 82 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயினில் ஆண்களை விட பெண்கள் பொதுத்துறையில் 13 சதவீதமும், தனியார் துறையில் 19 சதவீதமும் குறைவாக சம்பளம் பெற்று வருகின்றனர். இந்த சமத்துவம் இல்லாத நிலைதான், அங்கு பெண்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு எதிப்பு தெரிவித்துதான் அந்நாட்டில் பெண்கள் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஸ்பெயினில் நேற்று முன்தினம் 300 ரயில்கள் ஓடவில்லை. சுரங்க வழி ரெயில் சேவையும் பாதிப்புக்கு ஆளானது. ரயில் சேவை முடங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து