விராட் கோலி தேர்வு குறித்த வெங்சர்காரின் புகாருக்கு ஸ்ரீனிவாசன் மறுப்பு

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      விளையாட்டு
srinivasan 2018 3 10

மும்பை : விராட் கோலி தேர்வு குறித்து வெங்சர்கார் கூறியிருந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

பதவியை இழக்க...

இந்திய தேசிய அணியின் தலைமை தேர்வாளராக இருந்தவர் திலிப் வெங்சர்கார். இவர் சில தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவிற்கு முன்பு பத்திரிகையாளர்கிடம் பேசினார். அப்போது ‘‘2008-ம் ஆண்டு விராட் கோலியை இந்திய அணியில் அறிமுகப்படுத்தியதற்காக எனது பதவியை இழக்க நேரிட்டது. விராட் கோலிக்குப் பதிலாக பத்ரிநாத்தை அணியில் சேர்க்க வேண்டும் என்று அப்போது, பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசன் வலியுறுத்தினார்’’ என்று கூறியிருந்தார்.


முற்றிலும் தவறு...

திலிப் வெங்சர்காரின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார். இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறுகையில் ‘‘வெங்சர்காரின் குற்றச்சாட்டை வைத்து பார்க்கையில், அவருடைய நோக்கம் என்ன?. அது எதுவாக இருந்தாலும், அது உண்மையில்லை. முற்றிலும் அடிப்படையில்லாத தவறான நோக்கம். ஒரு கிரிக்கெட்டர் இதுபோன்று பேசுவது நல்லதல்ல. அவர் தொடர்ந்து செயல்படாமல் இருப்பதற்காக நான் உடந்தையாக இருந்தேன் என்று கூறியது உண்மையல்ல. தற்போது இந்த விவகாரத்தை கூறுவதற்கு என்ன காரணம். நான் வீரர்கள் தேர்வில் இடையூறு செய்யது கிடையாது.

மதிப்பளிக்கிறேன்...

ஒரு கிரிக்கெட்டராக நான் அவருக்கு மதிப்பளிக்கிறேன். அவரை தேசிய ஹீரோவாகத்தான் நான் பார்த்துள்ளேன். இதுபோல் அவர் பேசியதற்காக வருந்துகிறேன். அவரது பதவி நீக்கத்திற்குப் பின்னால் நான் இருப்பதாக அவர் குற்றம்சாட்டி, சில சர்ச்சைகளை உருவாக்க முயற்சி செய்கிறார். இது விரும்பத்தகாதது மற்றும் லாஜிக்கை மீறும் செயலாகும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து