நியூசி.க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: பேர்ஸ்டோவ் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

சனிக்கிழமை, 10 மார்ச் 2018      விளையாட்டு
Jonny Bairstow 2018 3 10

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5-வது ஒருநாள்...

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் 5 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடின. தில் 4 ஆட்டங்கள் முடிவில் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது.

பந்துவீச்சு தேர்வு...

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து 93 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் நிக்கோலஸ் (55 ரன்), சானட்னர் (67ரன்) ஜோடி சிறப்பாக விளையாடியது. நியூசிலாந்து 49.5 ஓவரில் 223 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. கிறிஸ்வோக்ஸ், ரஷீத் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

ஹால்ஸ் 61 ரன்...

224 ரன் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோவ், ஹால்ஸ் அதிரடியாக விளையாடினர். பேர்ஸ்டோவ் பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்டார். அவர் 58 பந்தில் சதம் அடித்தார். பேர்ஸ்டோவ் 60 பந்தில் 104 ரன் (9 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு 20.2 ஓவரில் 155 ரன் சேர்த்தனர். ஹால்ஸ் 61 ரன்னில் வெளியேறினார்.

தொடரை வென்றது...

இங்கிலாந்து 32.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 229 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் மோதும் 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 22-ந்தேதி தொடங்குகிறது.  ஆட்ட நாயனாக பேரிஸ்டோவும் ,தொடர் நாயகனாக வோக்ஸ் தெர்வு செய்யப்பட்டனர்,     

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து