முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழு: இலங்கை அதிபர் சிறிசேனா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணை நடத்துவார்கள் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா நேற்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சண்டையில் பெரும்பான்மை புத்தமதத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார். அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கண்டி மாவட்டத்தில் சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது புத்தமதத்தினர் பயங்கர வன்முறைகளில் ஈடுபட்டனர். அதில் 2 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்கள் தீ வைக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் 11 மசூதிகளும் பலத்த சேதம் அடைந்தன.

இதையடுத்து நாட்டில் 6-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு எமர்ஜென்சியை அறிவித்தார் அதிபர் சிறிசேனா. அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் இருந்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியையும் பறித்தார். கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற 3 நீதிபதிகள் குழுவை சிறிசேனா அமைத்துள்ளார். இத்தகவலை அதிபரின் அலுவலக அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.

இதற்கிடையில், ஊரடங்கு உத்தரவு நேற்று வாபஸ் பெறப்பட்டது. கலவரம் ஏற்பட்ட இடங்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், கலவரம் தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

முக்கிய குற்றவாளி கைது
கலவரத்துக்கு முக்கிய காரணமாக இருந்த புத்த மதத்தை சேர்ந்த அமித் வீரசிங்கே என்பவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர். சமூக வலைதளங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தவர். அவரை தலைநகர் கொழும்புவுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து