உலக சுகாதார அமைப்பு பகீர் எச்சரிக்கை: மனிதர்களை அச்சுறுத்தும் புதிய உயிர்கொல்லி நோய் ‘டிசீஸ் எக்ஸ்’

ஞாயிற்றுக்கிழமை, 11 மார்ச் 2018      உலகம்
World health organisation 2018 03 11

ஜெனிவா: உலக அளவில் மனித இனத்தை அச்சுறுத்துக்கூடிய உயிர்கொல்லி நோயாக டிசீஸ் எக்ஸ் என்ற பெயர் தெரியாத புதிர் நோய் பரவலாம் என்று உலக சுகாதார அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது.

இதுவரை அந்த நோயின் தீவிரத்தையும், எதிர்ப்பு மருந்துகளையும் கண்டுபிடிக்காத நிலையில், இதற்கு டிசீஸ் எக்ஸ் என்று நார்வே நாட்டின் அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். எதிர்காலத்தில் மனித இனத்தை அச்சுறுத்தும் நோயாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு மனித சமூகத்தை அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அச்சுறுத்தும் நோய்களை பட்டியலிட்டது.
அதில் எபோலா, லாசா பீஃவர், சிசிஎச்எப் ஹீமோராஜிக் ஃபீவர், நிபா, மெஸ், சார்ஸ், எபோலா, டிசீஸ் எக்ஸ் என்ற புதிய நோயையும் அறிவித்துள்ளனர்.

இந்த டிசீஸ் எக்ஸ் நோய் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘ இந்த டிசீஸ் எக்ஸ்’ நோய் சர்வதேச அளவில் மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவெடுக்கும். ஆனால், மனித இனத்துக்கு எந்தவிதமான பாதிப்பை உண்டு செய்யும் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து நார்வே நாட்டின் அறிவியல் அறிஞரும், உலக சுகாதார அமைப்பின் ஆலோசகருமான, ஜான் அர்ன் ராட்டிங்ஜென் கூறியதாவது:
இதற்கு முன் இதுபோன்ற நோயை நாங்கள் பார்த்தது இல்லை. அதன் காரணமாகவே இந்த நோய்க்கு “எக்ஸ்” எனபெயரிட்டுள்ளோம். டிசீஸ் எக்ஸ் நோய் உலகளவில் மக்களின் நலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

இந்த நோய் குறித்த ஆய்வும், கண்காணிப்பும், அதைத் தடுக்கும் முறையும் இனி அவசியம். ஆனால், விரைவில் நோயின் தீவிரத் தன்மையை ஆய்வு செய்து, எப்படி உருவாகிறது என்பதை அறிந்து, அதற்குரிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்போம்.

மனிதனால் உருவாக்கப்படும் வைரஸ், நோய் என்பது மிகவும் கொடுமையானது, ஆபத்தானது. ஏனென்றால், இந்த நோய் எப்படி உருவாகிறது, எந்த வைரஸில் இருந்து உருவாக்கினார்கள், இதற்கு தடுப்பு மருந்து என்ன என்பதை கண்டுபிடிக்கவே ஆண்டுகள் ஆகலாம்.

புதிதாக உருவாகும் வைரஸ் அல்லது நோய்க்கு ஏற்றார்போல் மனித உடலுக்கு எதிர்ப்பு சக்தி உடனடியாக உருவாகாது. இதற்குரிய தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முன் லட்சக்கணக்காண மக்களுக்கு பரவிவிடும்.

சிந்தடிக் பயாலஜி எனும் முறை, புதிய உயிர்கொல்லி வைரஸ் நோய்களை கண்டுபிடிக்கும் முறையை அனுமதிக்கிறது. இந்த முறையின் மூலம் புதிய வைரஸ் அல்லது நோயை கண்டுபிடித்து மக்களிடையே பரப்பினால், மிகவேகமாக பரவும்.

ஆனால், இந்த டிசீஸ் எக்ஸ் நோய் இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையாக உருவானதா என்பதே தெரியவில்லை. ஆனால், இயற்கையாக உருவானதாக இருக்கலாம் என நம்புகிறோம். இதற்கு முந்தைய ஸ்பானிஷ் ஃபுளு, எச்ஐவி போன்றுகூட இருக்கலாம். மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான அதீத தொடர்பு மூலம் இந்த நோய் வந்திருக்கலாம்.

ஜிகா வைரஸும் முதலில் இப்படித்தான் அஞ்சப்பட்டது, முதலில் நூற்றுக்கணக்கில் ஆப்பிரிக்காவில் மக்களை கொன்று குவித்தது, இப்போது, ஆயிரக்கணக்கில் மக்கள் மடிகிறார்கள். இன்னும் தடுப்பு மருந்து முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.

உலக நாடுகள் தங்களின் ஆய்வுகளை தீவிரப்படுத்தி, எதிர்கால நோயான டிசீஸ் எக்ஸ் நோய்காகன தடுப்பு மருந்துகளையும், அது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்

டிசீஸ் எக்ஸ் நோய் இயற்கையால் உருவாகாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட நோயாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள், உயிர்கொல்லி ஆயுதங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியாலும் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் கூட இதுபோன்ற உயிரி ரசாயன குண்டுகள் வீசப்பட்டு மக்கள் கொத்துகொத்தாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசீஸ் எக்ஸ் என்றால் என்ன?
டிசீஸ் எக்ஸ் என்பது இதுவரை பெயரிடப்படாத ஒருவகையான நோய். முதல் முறையாக உலக சுதாகார அமைப்பு இந்த நோயை பட்டியலிட்டுள்ளது. மனித உயிருக்கு கேடுவிளைவிக்கும் நோய்களில் பிரதானமாக டிசீஸ் எக்ஸ் இடம் பெற்றுள்ளது. யாரும் இதுவரை கண்டிராத, எதிர்காலத்தில் மிகப்பெரிய நோயாக டிசீஸ் எக்ஸ் உருவாகலாம்

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து