முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏவுகணை சோதனை நடத்தமாட்டோம் என்ற வாக்குறுதியை வட கொரியா காப்பாற்றும் - அமெரிக்க அதிபர் டிரம்பு நம்பிக்கை

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஏவுகணை சோதனைகள் எதையும் வடகொரியா நடத்தாது என்ற வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்றும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு வட கொரியா ஏவுகணை சோதனை எதையும் நடத்தவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தைக்கு முன்பாக அதுபோன்ற ஏவுகணை சோதனைகள் எதுவும் நடத்தப்படாது எனவும் வடகொரியா உறுதியளித்துள்ளது. இந்த வாக்குறுதியை அந்த நாடு நிச்சயம் மதித்து நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

வடகொரியா தற்போது சரியான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. இதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எதிர்கால நல்லெண்ண நடவடிக்கைகள் நிச்சயம் வெற்றி பெரும். இதற்கு தேவையான ஆதரவை நாம் அனைவரும் அளிக்க வேண்டும் என டிரம்ப் அந்த வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

தென் கொரிய தூதுக் குழுவுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த கருத்தை பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென் கொரிய அதிபருக்கு கடிதம் மூலம் வட கொரியா அதிபர் அழைப்பும் விடுத்திருந்தார். இந்தச் சூழலில், தனது நல்லெண்ணத் தூதுக் குழுவை வட கொரியாவுக்கு தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் அனுப்பி வைத்தார். அந்த குழுவினருடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-இன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், அதுவரையில், அணு ஆயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தமாட்டோம் எனவும் கிம் ஜோங்-உன் தூதுக்குழுவிடம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து