கடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 12 மார்ச் 2018      கடலூர்

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வே..தண்டபாணி, தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அவர்களிடம் நேரில் அளித்தனர்.மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட சிறுசேமிப்பு துறையின் சார்பில் உலக சிக்கன நாள் 2017-18-ல் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், 2016-2017-ம் ஆண்டில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கிய முகவர்கள் மூன்று நபர்களுக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வே..தண்டபாணி, வழங்கினார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.7500- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 1 பயனாளிக்கு ரூ.1500- மதிப்பீட்டில் ஊன்றுகோலினையும் கலெக்டர் வே..தண்டபாணி, வழங்கினார்இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சார் ஆட்சியர் (பயிற்சி) எம்.பி.சிவன்அருள் மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இராமு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரதி () இலட்சுமி, உதவி இயக்குநர் (தணிக்கை)மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) (பொ) இரா.ரெத்தினமாலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து