முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானின் முதல் ஹிந்து பெண் எம்.பி. பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் முதல் ஹிந்து பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிருஷ்ண குமாரி கோலி (39) நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பேநசீர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவின் தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் அவர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணான கிருஷ்ண குமாரி கோலி, சிந்து மாகாணத்தின் சிறுபான்மையினர் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.

அவர் மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது பெண்களுக்கும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் எனக் கூறப்படுகிறது. சிந்து மாகாணத்தில் தாகர்பர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமாரி கோலி. ஏழைக் குடும்பத்தில் கடந்த 1979-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்த அவரும், அவரது குடும்பத்தினரும் நிலச்சுவான்தாரர் வைத்திருந்த தனிச் சிறையில் 3 ஆண்டுகள் இருந்தனர். கிருஷ்ண குமாரி 16 வயதில் லால்சந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். சகோதரருடன் சமூக ஆர்வலராக பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இணைந்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதற்காக தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ரூப்லோ கோலியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமாரி கோலி. கோலியுடன், நாடளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேரும் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து