முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல் கட்சியில் சேர தமிழிசைக்கு மெயில் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடக்கிறது - தமிழிசை கொந்தளிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  மக்கள் நீதி மய்யத்தில் சேர வேண்டும் என ஈமெயில் வந்துள்ளது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை கொந்தளித்தார்.

மக்கள் நீதி மய்யம் மூலம் எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது. அந்த மெயிலில் தமிழிசை உறுப்பினராக இணைந்தமைக்கு உளமார்ந்த நன்றி என்றும், மேலும் நீங்களும் நானும் நாம் ஆனோம் என்றும் நாளை நமதே என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  - தமிழிசை

கமல்ஹாசன் கடந்த மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கடுமை கல்லூரி மாணவர்கள் கமல் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொள்கின்றன. கமல் அரசியல் குறித்து பேச ஆரம்பித்த போதெல்லாம் அதை கடுமையாக விமர்சித்தவர் தமிழிசை.

இன்று மக்கள் நீதி மய்யத்தில் சேருமாறு அவருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் இதுகுறித்து தமிழிசை கூறுகையில் , மக்கள் நீதி மய்யத்தில் சேர எனக்கும் இ- மெயிலில் அழைப்பு வந்தது. பாஜக மாநில தலைவரான நான் எப்படி கமல் கட்சியில் உறுப்பினராவேன். உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்றார் தமிழிசை. அந்த மெயிலில் தமிழிசை உறுப்பினராக இணைந்தமைக்கு உளமார்ந்த நன்றி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் நீங்களும் நானும் நாம் ஆனோம் என்றும் நாளை நமதே என்றும் தெரிவித்துள்ளார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

பாஜக மாநில தலைவரான நான் எப்படி கமல் கட்சியில் உறுப்பினராவேன். உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுகிறது. இது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என்றார் தமிழிசை செளந்திராஜன்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து