முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராசிபுரம் வட்டத்திற்குட்ட நியாயவிலைக்கடைகளில் குடிமைப்பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளில் நேற்று (13.3.2018) கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொகை விவரங்கள்

 

ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ஆலங்காட்டு புதூரில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையை பார்வையிட்ட கலெக்டர் பொருட்களின் இருப்பு, விற்பனை, மீத இருப்பு, விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும், காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் அரசினால் வழங்கப்பட்டுள்ள அதிநவீன விற்பனை முனைய கருவியினை( பாயிண்ட்; சேல்ஸ் மிசின்) இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் ஆகியவற்றின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விற்பனை குறித்து, விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட்; சேல்ஸ் மிசின்) பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

அதனைத்தொடர்ந்து ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் அத்தனூரில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை, பழந்தின்னிப்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆலாம்பட்டியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை, விநாயகா தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் அலவாய்பட்டியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடை, அலவாய்பட்டி – 2 நியாயவிலைக்கடை, அலவாய்பட்டி – நடுப்பட்டியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடை மற்றும் சௌதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சௌதாபுரத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடை ஆகியவற்றில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை ஆகிய குடிமைப் பொருட்களின் இருப்பு நிலவரம் குறித்து விற்பனை முனைய கருவியில் (பாயிண்ட்சேல்ஸ் மிசின்) பதிவுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பொருட்களின் இருப்பினை மாவட்ட வழங்கல் அலுவலர்களின் துணையுடன் சரிபார்த்தார்.

குடிமைப்பொருட்கள்

இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் குடிமைப்பொருட்கள் முறையாக வழங்கப்படுகின்றதா, விற்பனையாளர் சரியாக வருகின்றாரா என்றும் கேட்டறிந்தார். துவரம்பருப்பு தற்போது நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றது என்று குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

மேலும் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களை மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமாகவும், எடையளவு குறையாமலும்; முழுமையாக வழங்கிட வேண்டுமெனவும், நியாயவிலைக்கடை மற்றும் சுற்றுப்புறத்தை தற்போது உள்ளது போன்று எப்போதும் தூய்மையாக பராமரிக்குமாறும் கலெக்டர் மு.ஆசியா மரியம் விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செல்வி.உ.ஃபர்ஹத் பேகம், கூட்டுறவு சார்பதிவாளர் ஐ.கோவிந்தராஜ் உட்பட வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து