முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் இலவச தீயணைப்பு பயிற்சி முகாம் முதன்மை அலுவலர் குமார் துவக்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை உண்ணாமலை தனியார் திருமண மண்டபத்தில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஒரோ போரோ அறக்கட்டளை சார்பில் செவிலிய மாணவிகள், மருத்துவ ஊழியர்களுக்கான இலவச தீயணைப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

பயிற்சி முகாம்

இம்முகாமிற்கு தீயணைப்பு துறை முதன்மை அலுவலர் குமார் தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் தி.மலை பிரிவின் தலைவர் டாக்டர் சதீஷ்குமார, துணை தலைவர் டாக்டர் மாலதி, செயலாளர் டாக்டர் கதிரவன், ஒரோ போரோ அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு இலவச தீயணைப்பு பயிற்சி குறித்து விளக்கி பேசினர். தீவிபத்தின் பயிற்சி முகாமில் தீவிபத்தின் காரணங்கள், விபத்தை தடுக்கும் முறைகள், மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்தால் மேற்கொள்ள வேண்டிய உடனடி உயிர்காக்கும் நடவடிக்கைகள் குறித்து செயல்முறை பயிற்சிகளை ஒரோ போரோ தன்னார்வ தொண்டர்களின் மூலம் தீயணைப்பு முதன்மை அலுவலர் குமார், விரிவாக பார்வையாளர்களுக்கு நிகழ்த்திக்காட்டியதோடு, திருவண்ணாமலை தீவிபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்கம், ஒரோ போரா அறக்கட்டளை செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து