குரங்கணி தீ விபத்து சம்பவம்: வனக்காவலர் பணியிடை நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
kurankani forestfire 2018 3 13

தேனி  : குரங்கணி சோதனைச் சாவடியில் பணியாற்றிய வனக்காவலர் ஜெய்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி கொழுக்கு மலைப்பகுதிக்கு மலையேற்ற சுற்றுலா சென்றிருந்த 39 பேர் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத்தீயில் சிக்கினர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7 பேர் பெண்கள். இந்நிலையில் குரங்கணி சோதனைச் சாவடியில் பணியாற்றிய வனக்காவலர் ஜெய்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குரங்கணி சம்பவத்தை தொடர்ந்து ஜெய்சிங்கை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து