தமிழக சாலைப்பாதுகாப்பு மேம்பாட்டிற்காக ஆஸ்திரேலியா நிறுவனத்துடன் புதிய ஓப்பந்தம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      தமிழகம்
cm contract with australia 2018 3 13

சென்னை : தமிழ்நாட்டின் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, நெடுஞ்சாலை திட்டம் மற்றும் நிறுவனதிறன் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசிற்கும், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசின் சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை நிறுவன அமைப்பான விக்ரோட்ஸ் இடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டு திட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பரிமாறப்பட்டது.

பல்வேறு நடவடிக்கைகள்

தமிழ்நாட்டில் 59,459 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத்துறையால் மேம்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலைகளில் பயணிப்போரின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், சாலைகளை திறன்பட பராமரிக்கவும், போக்குவரத்தினை சீரியமுறையில் மேலாண்மை செய்யவும், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழ்நாட்டில் சாலை விபத்தின் காரணமாக ஏற்படும் அதிக அளவிலான உயிரிழப்புகளை குறைப்பதற்காக, சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் பயன்பாட்டிலுள்ள பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை தமிழ்நாடுஅரசு  செயல்படுத்தி வருகிறது.


பாதுகாப்பை மேம்படுத்துதல்....

அந்தவகையில், தமிழ்நாடு அரசு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசின் சாலை மற்றும் போக்குவரத்து நிர்வகிக்கும் அமைப்பான விக்ரோட்ஸ் உடன் ஒருங்கிணைந்து நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை, சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய அனைத்து துறைகளின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்காக ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறந்தபோக்குவரத்து...

இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டு ஏற்பாட்டின் மூலம் நெடுஞ்சாலைப் பணிகளை திட்டமிடல், ஒதுக்கப்பட்ட நிதியை திறன்பட உபயோகித்தல், துறையின் நிறுவனதிறன் மேம்பாட்டிற்கான பயிற்சி, நெடுஞ்சாலை மற்றும் சாலைபாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளுதல், சாலைப் பாதுகாப்பு குறித்து தொடர்புடைய அனைத்து துறைகளுக்குமான பயிற்சி மற்றும் ஆலோசனை, நவீனதகவல் தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிரூபணம் செய்யப்பட்ட சிறந்த தொழில் நுட்பங்களில் செயலாக்கம், போக்குவரத்து மேலாண்மை ஆகியவற்றிற்காக தமிழ்நாடு அரசும், ஆஸ்திரேலியாவின் விக்ரோட்ஸ் அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்படும். இதனால் தமிழ்நாட்டின் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதோடு சிறந்த போக்குவரத்து மேலாண்மையை உறுதி செய்யமுடியும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் நிதித்துறைகூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர், கோதண்டராமன், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கீதா, ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கானஅமைச்சர் லியோனிமல்டூன், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசின் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான அமைச்சர் பிலிப் டாலி டாக்கிஸ், ஆஸ்திரேலியாவின் விக்ரோட்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் (பதிவுமற்றும் உரிமம்) டேவிட் ஷேல்டன், ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையத்தின் ஆணையர் முனிஷ்ஷர்மா, தெற்கு ஆசியாவிற்கான விக்டோரியன் ஆணையர் மைக்கேல்வாடே மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து