அமெரிக்காவில் அவசரமாக தரை இறங்கிய விமானத்தில் இருந்து குதித்த பயணிகள் !

புதன்கிழமை, 14 மார்ச் 2018      உலகம்
america flight

நியூயார்க், அமெரிக்காவில் டல்லாசில் இருந்து போனிஸ் நகருக்கு இயக்கப்பட்ட விமானத்தில் கெட்டவாடை வந்ததால் விமானம் அவசரமாக தரையிறங்கிய போது பயணிகள் விமான இறக்கைகளில் இருந்து குதித்தனர்.

பயணிகள் விமானம் ...

அமெரிக்காவில் டல்லாசில் இருந்து போனிஸ் நகருக்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானியின் இருக்கை பகுதியில் ஒரு விதமான கெட்டவாசனை வந்தது. பரபரப்படைந்த விமான ஊழியர்கள் பயணிகளை உஷார் படுத்தினர். இதனால் பயணிகள் பீதியில் உறைந்தனர். இதற்கிடையே விமானம் அல்புகுயர்கியூ சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.


சுமார் 8 அடி உயரத்தில்...

அப்போது விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு தயாராக இருந்தன. இந்தநிலையில் உயிர் பீதியில் இருந்த பயணிகளில் சிலர் விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர வாசல் வழியாக வெளியே குதித்தனர். அவர்கள் விமானத்தில், சுமார் 8 அடி உயரத்தில் இருந்து குதித்தனர். இதுகுறித்து ஒரு தம்பதி கூறும்போது உயிர் பயத்தில் எங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்து குதித்தோம் என தெரியவில்லை. குதித்த பிறகுதான் இறக்கை பகுதியில் 8 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்தோம் என தெரிந்தது. இது மிகவும் பிரமிப்பாக உள்ளது என்றனர். அந்த தம்பதி இதை டுவிட்டர் வீடியோ பக்கத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து