முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி பகுதிகளில் விடிய விடிய கன மழை குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

புதன்கிழமை, 14 மார்ச் 2018      திருநெல்வேலி
Image Unavailable

தென்காசி பகுதியில் நேற்று முன்தினம்  இரவு விடிய, விடிய கன மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு

குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்தது. இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால் பொதுமக்கள் குடிநீருக்கு பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாமல் பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று முன்தினம் இரவு நள்ளிரவில் கன மழை பெய்யத் துவங்கியது. நேரம் செல்ல செல்ல மழையும் அதிகரித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகளில் சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இன்று அதிகாலை வரை மழை நீடித்தது. விடிய, விடிய பெய்த மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. குற்றாலம் மலைப் பகுதியிலும் கன மழை பெய்ததால் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. சிறிது நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் வெள்ளம் சீறி பாய்ந்தது. பழையகுற்றால அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்லும் பாதை வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் ஐந்தருவி, பழையகுற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிற்றருவி, புலியருவியிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. நேற்று பிற்பகல் மீ;ண்டும் மழை பெய்தது. மழை காரணமாக வெயில் இல்லை. குளிர்ந்த சூழ்நிலை நிலவியது.கேரள மாநிலம் ஆரியங்காவு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தீப்பிடித்தது. கடந்த இரண்டு நாட்களாக இந்த தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் மலையில் கட்டுப்படுத்த முடியாமல் கொளுந்து விட்ட எரிந்த காட்டுத் தீ அணைந்தது. இதனால் வனத்துறையினர் மட்டும் அல்லாமல் அப்பகுதி பொதுமக்களும் நிம்மதியடைந்தனர்.தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பெய்த கன மழை விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. மேலும் நிலத்தடி நீர் உயர்ந்து குடிநீர் பிரச்னையும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து