முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜயவேணி எம்எல்ஏ புகார் எதிரொலி பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ மீது வழக்கு தேசிய ஆணைய அதிகாரிகள் உத்தரவு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      புதுச்சேரி

புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ பாப்ஸ்கோ ஊழியர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, புதுவை அரசையும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களையும் கடுமையாக விமர்சித்தாக தெரிகிறது.அதில் பெண் எம்எல்ஏ விஜயவேணியை தொழில் ரீதியாக தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசியதாக கூறப்பட்டது.

எம்.எல்.ஏ. புகார்

இது தொடர்பாக விஜயவேணி எம்எல்ஏ தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிசிஆர் போலீஸ் பிரிவில் புகார் கொடுத்தார். அதில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் இந்த புகாரில் அடிப்படை ஆதாரம் இருந்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று போலீசார் கூறினர். மேலும் புகார் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் வழிக்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் முதுநிலை விசாரணை அதிகாரிகள் இனியன், லிஸ்டர் ஆகியோர் புதுவை வந்தனர். அவர்கள்  தாழ்த்தப்படடோருக்கான செயல் படுத்தக் கூடிய திட்டங்கள், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு துறையிடம் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் அஸவணிகுமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அதில் தொழில் அதிபர் வேலழகன் கொலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தாழ்த்தப்பட்ட ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது  விஜயவேணி எம்எல்ஏ தன்னை ஜாதி ரீதியாக பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் விமர்சித்தார். இது தொடர்பாக பிசிஆர் போலீசில் நான் புகார் கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறினார்.  அதற்கு தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போலீசாரிடம் கேட்டனர். அதற்கு போலீஸ் அதிகாரிகள் சில விளக்கங்களை கொடுத்தனர். அதை ஏற்றுக் கொள்ளாத ஆணைய அதிகாரிகள் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். எனவே விரைவில் சாமிநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து