முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41 லட்சம் வங்கி கணக்குகள் ரத்து: எஸ்.பி.ஐ

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரத்து செய்துள்ளது. இந்த விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மனுச் செய்தார். அதில், சேமிப்புக் கணக்கில் குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்டது.

அது முதல் கடந்த ஜனவரி மாதம் வரை குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத எத்தனை சேமிப்பு கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு இருந்தார். இந்த கேள்விக்கு ஸ்டேட் வங்கி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து