எல்.ஓ.யூ முறை ரத்து: ரிசர்வ் வங்கி நடவடிக்கை

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வர்த்தகம்
RBI 2017 10 21

உறுதியளிப்பு கடித முறையை பயன்படுத்தி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,967 கோடிக்கும் மேலாக முறைகேடு நடந்தது. இதன் எதிரொலியாக எல்ஒயூ, எல்ஒசி ஆகியவை மூலமாக நிதி பெறும் முறையை ரிசர்வ் வங்கி உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், எல்ஓயு / எல்ஒசி-யை பயன்படுத்தும் இறக்குமதியாளர்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. அதே சமயத்தில் சில விதிமுறைகளுடன் வர்த்தக கடன் மற்றும் எல்.ஓசி ஆகியவை இறக்குமதிக்கு வழங்கப்படலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியை கண்டுபிடிக்க, மத்திய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரணையை தொடங்கி இருக்கின்றன. பல நகரங்களில் நடத்தப்பட்ட விசாரணையில் நீரவ் மோடியின் சில ஆயிரம் கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வங்கியின் முன்னாள் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து