65 விமான சேவைகளை ரத்து செய்தது இண்டிகோ

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வர்த்தகம்
Indigo flight 2017 11 13

விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) 11 விமானங்கள் பறப்பதற்கான அனுமதியை ரத்து செய்திருக்கிறது. ஏ320 நியோ விமானங்கள் (பிராட் விட்னி இன்ஜின்) ரத்து செய்திருக்கிறது. இதில் எட்டு விமானங்கள் இண்டிகோ மற்றும் கோ ஏர் நிறுவனத்தை சார்ந்தவையாகும். இதன் காரணமாக இண்டிகோவின் 47 விமான சேவைகளும், கோ ஏர் நிறுவனத்தின் 18 விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இண்டிகோ நிறுவனம் தினமும் 1,000 விமான சேவைகளை இயக்குகிறது. இதில் 47 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. வாடியா குழுமத்தை சேர்ந்த கோ ஏர் நிறுவனம் தினமும் 230 விமான சேவைகளை வழங்குகிறது. இதில் 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களுரூ, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஸ்வர், அமிருதசரஸ் மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இண்டிகோ அறிவித்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து