முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சிக்கு பகுதியில் வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு வாகனம் ஆணையாளர் ரெ.சதீஷ் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      சேலம்
Image Unavailable

சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி இனங்கள் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பதிவு மற்றும் பதிவிறக்கம் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை நேற்று மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ஆணையாளர் ரெ.சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு வாகனம்

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 கோட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலி மனை வரி , கடை வாடகை, உரிமையாணை கட்டணங்கள், பாதாள சாக்கடை திட்ட வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டண வேறுபாட்டு வைப்புத்தொகைகளை செலுத்துவதற்கு ஏதுவாக, 13 வரி வசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் ஆன்லைன் மூலமும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி இனங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்களிடையே தெரிவிப்பதற்கு ஏதுவாக, விழிப்புணர்வு வாகனம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாகனம் மூலம் எந்தெந்த பகுதிகளில் வரி வசூல் மையங்கள் செயல்படுகிறது என்ற விவரங்கள், என்னென்ன வரியினங்கள் உள்ளது உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவு மற்றும் பதிவிறக்கம் செய்வது போன்ற விவரங்களும் , மாநகர் பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இவ்வாகனம் மூலம் தெரியப்படுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், கே.பி. கோவிந்தன், மு. கணேசன், ப. ரமேஷ்பாபு, உதவி வருவாய் அலுவலர்கள் எம். விவேகானந்தன், பி. மருதபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து