ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனையை திரும்பப்பெற கோரிய பேரறிவாளன் மனு தள்ளுபடி

புதன்கிழமை, 14 மார்ச் 2018      இந்தியா
Perarivalan 2018 1 24

புதுடெல்லி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

மனு தாக்கல் ...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், இந்த வழக்கில் சி.பி.ஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


சி.பி.ஐ எதிர்ப்பு

இந்த மனுவை கடந்த ஜனவரி மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் மூன்று வாரங்களுக்குள் இதுதொடர்பாக சி.பி.ஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தனர். பேரறிவாளன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ, மனுதாரர் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரி பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

மறு ஆய்வுக்கு...

19 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் தலையிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 137-ஆவது பிரிவின் படி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள், உத்தரவுகள் நாடாளுமன்றம் உருவாக்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டதாகும். 145-ஆவது பிரிவின்படி, எந்தவொரு தீர்ப்பளிக்கப்பட்ட உத்தரவையும் மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது.

ஏற்க முடியாது...

கொலை வழக்கில் தொடர்பில்லை, அப்பாவி என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நிலையில் விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, எவ்வித அடிப்படையும் இன்றி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே, 1998, மே 11-ஆம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை நீதிசார் நலன் கருதி சுப்ரீம் கோர்ட் நிராகரிக்க வேண்டும். மனுதாரருக்கு பெரிய அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பிரமானப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதிகள் கேள்வி

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேட்டரி வாங்கி கொடுத்ததை விட கொலைச்சதியில் பேரறிவாளனுக்கு பங்கு உள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடினார். அரசின் வாதத்தை ஆட்சேபிக்க மனுதாரருக்கு (பேரறிவாளன்) ஆதாரங்கள் உள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குற்றவாளி இல்லை என கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இது தொடர்பாக 4 வாரத்தில் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து