முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டம் கொட்டாரமடுகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை திறன் வகுப்பறை கலெக்டர் சி.அ.ராமன், திறந்து வைத்தார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கொட்டாரமடுகு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடுதிரை திறன் வகுப்பறையினை கலெக்டர் சி.அ.ராமன், திறந்து வைத்து பேசியதாவது:-

முக்கிய பங்கு

 

கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது ஆன்றோரின் வாக்கு. கல்வி நம் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. கரையில்லாத கல்வியைக் குறைவில்லாமல் கற்றால் உலகம் நம்மை வாழ்த்தி வணங்கும். எல்லா சூழ்நிலையிலும் ஒருவர் கற்ற கல்வியானது புகழுறவும், போற்றப்படவும் கைக்கொடுக்கும் என்பது திண்ணம். தன் குடும்பம், சமுதாயம், நாடு மற்றும் உலக மேம்பாட்டிற்கும் இயன்ற ஆக்கச் சிந்தனைகளை வள்ளல் போல் வாரி வழங்கிட கல்வி கற்க வேண்டும். இன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது கல்வி. எந்தவொரு சமூகத்தினரும் கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் கடினமாக ஒன்றாகும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கல்வியை எளிய முறையில் கற்க தொடு திறன் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பை இன்றைய நவீன அறிவியல் நடைமுறைபடுத்தி வருகின்றது. இதன் மூலம் கற்பித்தல் திறன் குறைவுடைய ஆசிரியர்களுக்கும் கற்றல் திறன் குறைவுடைய மாணவர்களுக்கும் மனதில் பதிய வைக்குமாறு கல்வி கற்பிக்க இயலும்.

நாட்டிற்கு பெருமை

மேலும் மாணவ மாணவிகள் தொடு திறன் வகுப்பறையை பயன்படுத்தி தங்களின் திறமையை வளர்த்து கொண்டு தங்கள் ஊர் மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்க்க ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மாணவ மாணவிகளின் ஆர்வத்தையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், பாடத்திட்டத்தின் பாடத்திட்டத்தை முன்னோக்கி செல்லும் தகவல்களைப் புரிந்துக் கொள்ள சிறந்ததாகும். இம்முறையிலான கல்வியினை மாணவ மாணவிகளுக்கு வழங்கி இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்களின் சிந்தனையை வளர்த்துக் கொள்ள கொட்டாரமிடுகு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அரசின் உதவி இல்லாமல் அரசின் அனுமதி பெற்று தங்களின் சொந்த பங்களிப்பில் தொடுதிரை திறன் வகுப்பறையை உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாய்ப்பினை மாணவ மாணவிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட கலெக்டர் சி.அ.ராமன், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிஸ்வரர்பிள்ளை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இளவரசன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இராபர்ட் இளவரசன், மேற்பார்வையாளர்கள் வெண்ணிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த், ரகு, கிராம நிர்வாக அலுவலர் சசி, கொட்டாரமடுகு பள்ளி தலைமை ஆசிரியர் கோட்டீஸ்வரன், இடைநிலை ஆசிரியர்கள் தனலட்சுமி, வித்யா, சந்திரன், பட்டதாரி ஆசிரியர்கள் வத்சலா, கோமகன், ஊர்த் தலைவர்கள் பாண்டுரங்கன், உத்ரா ராமமூர்த்தி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து