முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமாவடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில் நேற்று(14.03.2018) நடைபெற்றது.

சிறு கண்காட்சி

இம்மக்கள் தொடர்பு முகாமில் தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர். இம்மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பேசியதாவது: " இந்த மக்கள் தொடர்பு முகாம் இந்தியாவிலேயே முதன் முறையாக 1969 முதல் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மாதம்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களது குறைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் துறை சார்ந்த பல திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்களே மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 85992 பயனாளிகளுக்கு பிரதி மாதம் ரூ.1000 வீதம் ரூ.8.60 கோடி வழங்கப்படுகிறது. கட்டுமாவடி கிராமத்தில் 211 நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் ரூ.2.11 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. கட்டுமாவடி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகள் திட்டத்தின் கீழ் 19 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.32 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 1 வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.2.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமாவடி ஊராட்சியில் தனிநபர் இல்லக் கழிப்பறைத் திட்டத்தின் கீழ் 462 கழிவறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.55.44 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுமாவடி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள்; நலத்துறை சார்பில் 5 பேருக்கு பிரதி மாதம் ரூ.1500 வீதம் ரூ.90000 வழங்கப்பட்டு வருகிறது. திட்டச்சேரி, கட்டுமாவடி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2017-18 ஆம் ஆண்டிற்கு பயிர் காப்பீடானது 811 நபர்களுக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.7.98 லட்சம் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கட்டுமாவடி கிராமத்தில் உள்ள 914 குடும்ப அட்டை தாரர்கள் உள்பட நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 4,43,167 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 8885 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 207-18 ஆம் ஆண்டிற்கு 226 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. 2018-18 ஆம் ஆண்டில் 5359 குழுக்களுக்கு ரூ.158.34 கோடி வங்கிகள் மூலமாக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய மக்கள் தொடர்புத் திட்ட முகாமிற்கு முன்னரே 120 மனுக்கள் பெறப்பட்டு, 120 மனுக்களுக்கும் பதில் அறிக்கைகள் வரப்பெற்றுள்ளன. இவற்றில் 48 மனுக்கள் ஏற்கப்பட்டு, 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் பெறப்பட்டுள்ள 86 மனுக்கள் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, முடிவான பதில் விரைவில் தெரிவிக்கப்படும். பொதுமக்கள் தமிழக அரசு செயல்படுத்தி வரும் நல்ல பல நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றமடைய வேண்டும்." என தெரிவித்தார்.

இம்முகாமில் வருவாய்த் துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.3.97 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாவும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் மாதாந்திர உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூ.51,454 மதிப்பிலான நுண்ணீர்ப் பாசனத்திட்டக் கருவிகளும், என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சார் கலெக்டர் கே.பி.கார்த்திகேயன்,.,, தனித்துணை கலெக்டர்(சமூகப் பாதுகாப்புத்திட்டம்) எம்.வேலுமணி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் இராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து