முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      விளையாட்டு
tri series 2018 3 14

கொழும்பு : முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டம் மற்றும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா நேற்று எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்து முதல் அணியாக நுழைந்தது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் இந்திய அணி வீழ்ந்தது. 2-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியுடன் தொடங்கிய வங்கதேசம், பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சு தேர்வு

கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் முகமதுல்லா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா, 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்தார். சுரேஷ் ரெய்னா, 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் விளாசினார். ஷிகர் தவன் 35 ரன்கள் சேர்த்தார்.

இறுதிப்போட்டிக்கு...

வங்கதேச தரப்பில் ரூபெல் ஹுசைன் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதையடுத்து அந்த அணி 177 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியில் முஷ்பிகர் ரஹிம் 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அந்த அணியில் தமீம் இக்பால் 27 ரன்கள், ஷபீர் ரஹ்மான் 27 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர் எடுத்தனர். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.  இந்த வெற்றி மூலம் இந்திய அணி முத்தரப்பு டி-20 போட்டித்தொடரின் இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக முன்னேறியுள்ளது.

இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், சிராஜ், தாகூர், ஷாகல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

 

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து