ரஜினி பகுதிநேர அரசியல்வாதியாக உள்ளார் - அமைச்சர் ஜெயகுமார் தாக்கு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      தமிழகம்
jayakumar(N)

சென்னை : ரஜினி பகுதிநேர அரசியல்வாதியாக உள்ளார் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்து உள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்காலிக ஊழியராக...


நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். உலகத்திலேயே அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மீகவாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அரசியலில் ஒரு பகுதிநேர அரசியல்வாதி என்று கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ஞானி ரஜினிதான். இன்னும் 3 மாதத்தில் அரசியலில்  தற்காலிக ஊழியராக இருப்பேன் என்பார்.

ஒப்பிட முடியாது...

கன்னியாகுமரியில் ஏற்பட்ட காற்றழுத்த மண்டலத்தால் ஏற்பட்ட சூறாவளியில் எந்த மீனவர்களும் சிக்கவில்லை. வெகுதூரத்தில் கடலுக்குள் சென்றுவிட்ட 500-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கும் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்ததை நமது மாநிலத்தோடு ஒப்பிட முடியாது. நிதி தன்னாட்சியை பேணிக்காக்கும் வகையில் நாம் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நமக்கு குறைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராடக்கூட தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து