முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் தென்னை விவசாயிகளுக்கான நீரா பானம் உற்பத்தி அறிமுக கூட்டம்-

வியாழக்கிழமை, 15 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் - விருதுநகர் ஹோட்டல் பர்மா அரங்கில் தென்னை வளர்ச்சி வாரியம், சென்னை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, தென்னை விவசாயிகளுக்கான “நீரா” பானம் உற்பத்தி அறிமுக கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:
 நீரா என்பது தென்னை மரத்தின் இளம் பூவிலிருந்து கிடைக்கும் இனிப்பு பானமே நீரா ஆகும். நீராவானது அதிக ருசியான ஏற்கத்தக்க நறுமணம் உடைய ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். நீரா இறக்குவதற்கு இளம் பூவில் சீவி விடபட்ட தென்னம்  பாளையின் நுனியிலிருந்து நீரா கசிந்து சொட்டுகிறது. தென்னம் பாளையிலிருந்து வடித்து எடுக்கப்படும் நீரா வடிகட்டப்பட்டு, குளிரூட்டம் செய்யப்படுகிறது. பின்னர் அது மைய விலக்கு சுழற்சி முறையில் சுத்தம் செய்யப்பட்டு சிப்பமாகக் கட்டி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த நீரா பானத்திலிருந்து மதிப்பு கூட்டு பொருட்களாக கருப்பட்டி, தென்னை மர பதனீர், தென்னை மர சர்க்கரை, நீரா சாக்லெட், நீரா கேக், நீரா அல்வா, நீரா லட்டு, நீரா பிஸ்கட், நீரா ஜாம், நீரா பேடா உள்ளிட்ட பல பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயார் செய்து அதிக லாபம் ஈட்டி பயன்பெற முடியும்.
 தென்னை மரத்தின் பாரம்பரியத்தை சார்ந்தது  அதாவது மரத்திற்கு மரம் மற்றும் பாளைக்கு பாளை மாறும், சுற்றுப்புற சூழ்நிலை (நாளுக்கு நாள் மற்றும் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுபடும்) மற்றும் சாறு எடுப்பவர் திறமையை பொறுத்து மாறுபடும். குட்டைஒநெட்டை தென்னையில் அதிகமாக நீரா உற்பத்தியாகும். தென்னை மரம் வருடத்திற்கு 12-14 பாளை உற்பத்தி செய்யும். ஓவ்வொரு பாளையிலிருந்தும் 1.5 முதல் 3 லிட்டர் சாறு நாளொன்றுக்கு கிடைக்கும.; அதாவது ஒரு பாளை 30- 45 நாள் வரை நீரா சாறு கொடுக்கும் (80-120 லிட்டர் சாறு, பாளை). சராசரியாக தென்னை மரம் ஒன்றுக்கு 6 மாதத்திற்கு 400-600 லிட்டர் சாறு கிடைக்கும். ஐஸ் பாக்ஸ் முறை, எதிர் நொதித்தல் முறை  ஆகிய முறைகளில் நீரா பானம் தயாரிக்கப்படுகிறது. மேற்கண்ட முறைகளில் நீரா பானம் தயாரித்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும்.
தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தென்னை சார்ந்த மதிப்பு கூட்டு பொருட்கள் அதிகம் உள்ளது. நீரா உரிமம் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்று சட்டம் 2006- ன் கீழ் வழங்கப்படுகிறது. நீரா உரிமம் பெறுவதற்கு, தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், அதாவது கம்பெனி சட்டம் 2013 - ல் பதிவு பெற்றதும் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1983 மற்றும் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. நீரா உரிமம் பெறுவதற்கு உதவி கலால் ஆணையர், மாவட்டத்திற்கு ஆய்வு அதிகாரியாக உள்ளார். மேலும் நீரா உரிமம் பெறுவதற்கு உணவு தரக்கட்டுப்பாடு சான்று  பெற வேண்டியது அவசியமாகும்.
 நீரா பானம் தயாரிப்பது குறித்தும், தென்னை வளர்ச்சி வாரியத்தினுடைய துணை இய்ககுநர் அவர்கள் விரிவாக விளக்கி கூறுவார்கள்.  விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 7000 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே இங்கு வருகை தந்துள்ள விவசாயிகள் தென்னை சார்ந்த தொழில்கள், மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றுவதற்கு தேவையான கருத்துக்களையும், சந்தேகங்களையும், நீரா பானம் தயாரிப்பதற்கு என்னெ;ன உரிமம் பெற வேண்டும் என்பது குறித்தும் இந்த அறிமுக கூட்டத்தில் கேட்டு தெரிந்து கொண்டு, ஆர்வத்துடன் தென்னை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்ய முன்வந்து, அதிக லாபம் ஈட்டி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  கு.மணிசேகரன், துணை இயக்குநர்கள்  .டி.பாலசுதாகரி(தென்னை வளர்ச்சி வாரியம்,சென்னை),  .கார்த்திகேயன்(வேளாண் வணிகம்),  அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள், பல்வேறு  உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து