முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி: வாஷிங்டன் சுந்தருக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

வியாழக்கிழமை, 15 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : வங்காளதேசத்தை தனது மந்திர பந்துவீச்சால் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி

3 நாடுகள் போட்டியில் வங்காளதேசத்தை மீண்டும் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 5-வது ‘லீக்’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. கேப்டன் ரோகித்சர்மா 61 பந்தில் 89 ரன்னும் (5 பவுண்டரி, 5 சிக்சர்), ரெய்னா 30 பந்தில் 47 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), தவான் 27 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரூபல் உசேன் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய வங்காளதேச அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

வாஷிங்டன் சுந்தர்...

முஷ்பிகுர் ரகீம் அதிகபட்சமாக 55 பந்தில் 72 ரன் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், ‌ஷர்துல் தாகூர், யசுவேந்திர சாஹல் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
மகிழ்ச்சி அளிக்கிறது

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

‘டாஸ்’ போடும் போது பேட்டிங்கில் நான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது முக்கியமானது என்று தெரிவித்தேன். நான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 10 முதல் 15 ரன்கள் வரை நாங்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஆனால் கடைசி ஓவர்களில் (டெத் ஓவர்) பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அவரது மந்திர பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது. புதிய பந்தில் சுழற்பந்து வீரர்கள் வீசுவது அவ்வளவு எளிதல்ல. இதனால் நான் அவரை மிகவும் பாராட்டுகிறேன்.

திட்டமிட்டு வீசினார்

ஆட்டத்தின் 2-வது ஓவரை வீச வாஷிங்டன் சுந்தரை அழைத்தேன். அவர் தையரித்துடன் பந்தை வாங்கினார். எந்தவித பயமும் அவரிடம் இல்லை. எப்படி பந்துவீச வேண்டும் என்பதை அவர் திட்டமிட்டு வீசினார். இலங்கைக்கு எதிராக அவர் நன்றாக வீசினார். இதேபோல மற்ற பந்துவீச்சாளர்களும் தங்களது திட்டத்தை நன்றாக செயல்படுத்தினார்கள். ரெய்னா தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து