முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரி சிக்கலானது - உலக வங்கி

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

நாடு முழுதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அமலானது. மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் மறைமுக வரி விகிதத்தை முறைப்படுத்தி நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் பொருட்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. 0 சதவீதம் , 5 சதவீதம்  , 12சதவீதம்  , 18 சதவீதம்  , 28 சதவீதம்   என 5 விதமான ஜிஎஸ்டி வரி கட்டமைப்பு இந்தியாவில் உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கும் 115 நாடுகளில், அதிகமான வரி கட்டமைப்பு விதிக்கும் நாடு இந்தியா தான்.

ஜிஎஸ்டி வரிவிதிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தடை பட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிக்கும் 115 நாடுகளில், இந்தியா, பாகிஸ்தான், இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே பல கட்டமைப்புகளாக வரி விதிக்கின்றன. அதிலும் இந்தியா, அதிகபட்சமாக 5 விதமான வரி கட்டமைப்புகளை பின்பற்றுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன. உலகில் அதிகபட்ச வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து