முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு விருதுநகர் கலெக்டர் சிவஞானம் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.- விருதுநகர் சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சூலக்கரை கே.வி.எஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர்  அ.சிவஞானம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது:
 தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கான அரசுப் பொதுத்தேர்வுகள் நேற்று (16.03.2018) முதல் 20.04.2018 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்காக 103 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 340 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். திருவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 36 மையங்களில் 4,334 மாணவர்களும், 4,284 மாணவியர்களும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 4,950 மாணவர்களும், 5,188 மாணவியர்களும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 4,223 மாணவர்களும், 4,289 மாணவியர்களும் தேர்வு எழுதுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, மற்றும் விருதுநகர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 13,507 மாணவர்களும், 13,761 மாணவியர்களும் ஆக மொத்தம் 27,268 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 558 மாணவர்களும், 294 மாணவியர்களும் ஆக மொத்தம் 852 மாணவ மாணவியர்களும்; தேர்வு எழுதுகின்றனர். மேலும் 218 மாணவர்களும், 114 மாணவியர்களும், தனித்தேர்வர்களில் 43 மாணவர்களும், 9 மாணவியர்களும் ஆக மொத்தம் 384 மாணவ மாணவியர்கள்; தேர்வுக்கு வருகை தரவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்சி மைய முதல்வர் மற்றும் பதின்மப்பள்ளி ஆய்வாளர் தலைமையில் மொத்தம் 8 பறக்கும் படை உறுப்பினர்களும், 161 ஆசிரியர்கள் நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் மற்றும் 16 ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கபட்டுள்ளனர்.  மாவட்டத்தில் 103 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 18 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், 18 கூடுதல் துறை அலுவலர்கள், 22 வழித்தட அலுவலர்கள், 1,474 அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் 22 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 102 பெ® தேர்வு எழுது»‹றன®. அÂல் பா®வையற்றோர் 35 பே® தேர்வு எழுது»‹றன®. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் 91 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர்  அ.சிவஞானம், . தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர்  வாமிநாதன் அவர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உடனிருந்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து