முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. இடைத் தேர்தலில் வாக்கு வித்தியாசம் குறைந்ததற்கு இயந்திரங்களின் கோளாறே காரணம்: அகிலேஷ் யாதவ் புகார்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால் உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடிக்கு வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

லக்னோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது, உ.பி.யில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு இல்லாமல் இருந்திருந்தால் சமாஜ்வாதிவேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். பல இயந்திரங்களில் வாக்குப் பதிவு துவங்குவதற்கு முன்பே ஓட்டு பதியப்பட்டுள்ளது. பா.ஜ.க மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வாக்குச் சீட்டு முறை இருந்தால் மக்கள் இன்னும் தங்கள் கோபத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியும். இவ்வாறு அகிலேஷ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து