முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி, -சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருத்தங்கல்லில் இயங்கி வந்த துணை ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார். நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள், டாக்டர்கள் மற்றும் ஊழியர்களின் அணுகுமுறை குறித்தும் கேட்டறிந்தார். மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள், தேவைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அறுவை சிகிச்சை பிரிவு, ஆண்கள், பெண்கள் உள்நோயாளிகள் வார்டுகளையும் பார்வையிட்டு சுகாதார வசதிகள், குடிநீர் வசதிகள் குறித்து கேட்டரிந்தார். ஆய்வின் போது டாக்டர்கள்,  செவிலியர்கள், அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, ஜெ.பேரவை நகர செயலாளர் ரமணா, மாவட்ட கழக பொருளாளர் ராஜவர்மன், சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, மாவட்ட தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சேதுராமன், ரவிச்செல்வம் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து