முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயத்தால் நியூசிலாந்து தொடரில் இருந்து இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் விலகல்

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து கிரேன் விலகியுள்ளார்.

பயிற்சி ஆட்டம்
நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந்தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக இரண்டு நாட்கள் கொண்ட பகல்-இரவு பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மேசன் கிரேன் இடம்பிடித்திருந்தார்.

கிரேனுக்கு காயம்
தற்போது கிரேனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக இடது கை ஸ்பின்னரான ஜேக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேசன் கிரேனுக்கு முதுகுப் பகுதியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இங்கிலாந்து புறப்படுகிறார் என்று இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து