முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மகளிர் அணிக்கு ‘ரக்பி’ பயிற்சி அளிக்கும் ராஜபக்சே மகன்

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே காஷ்மீர் சிறுமி ரக்பி அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகிந்திரா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சிறந்த ரக்பி வீரர். இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக இருந்து வருகிறார். இலங்கை ஆடவர் ரக்பி அணியின் முன்னாள் கேப்டனாகவும் நமல் ராஜபக்சே இருந்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் ரக்பி மகளிர் அணிக்கு தேவையான பயிற்சிகளை அளிப்பதாக நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இது குறித்து நமல் ராஜபக்சேவிடம் கேட்டபோது, ‘ காஷ்மீர் ரக்பி சிறுமிகள் அணிக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக இலங்கையின் மூத்த பயிற்சியாளர் ரோனி இப்ராஹிமிடம் பேசி இருக்கிறேன். காஷ்மீர் வீராங்கனைகளுக்கு எவ்வித உதவிகள் தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறோம்.

காஷ்மீர் வீராங்கனைகளுக்கு களத்துக்கு வந்து ரக்பி பயிற்சி அளிக்கவும் முயற்சித்து வருகிறோம். காஷ்மீரின் சூழலை அறிந்து அதை செயல்படுத்துவோம். சமூகத்தில் புனரமைப்பு, ஒற்றுமை, தலைமைப்பண்பு ஆகியவற்றை வளர்க்க விளையாட்டு முக்கியப் பங்காற்றும்’ எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ட்விட்டரில் கூறுகையில், ‘ எங்கள் மாநிலத்தின் இளம் ரக்பி வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க உதவும் நமல் ராஜபக்சேவுக்கு எங்களது நன்றியைத் தெரிவிக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து