முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி: இந்திய - வங்காளதேசம் இன்று பலப்பரீட்சை

சனிக்கிழமை, 17 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் ஈடுகொடுத்து போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இந்தியா முன்னேற்றம்

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் வங்காளதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை மீண்டும் அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டி

வங்காளதேசம் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது. இலங்கை அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் இரு புள்ளிகளை மட்டுமே பெற்று வெளியேறியது. போட்டியை நடத்தும் இலங்கை அணி 2 முறையும், வங்காளதேசத்திடம் தோற்று வெளியேறியது பரிதாபமே. இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.

தவான் - ரோகித்...

இந்திய அணி 2 முறை வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்ததால் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. அதே நேரத்தில் வங்காளதேசத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணி இலங்கையை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தது. இந்திய அணியின் பேட்டிங்கில் தவான் (188 ரன்) கேப்டன் ரோகித்சர்மா (117), மனிஷ் பாண்டே (106), ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சுழற்பந்து வீரரான அவர் 4 ஆட்டத்தில் 7 விக்கெட் கைப்பற்றி இந்த தொடரில் முதல் இடத்தில் உள்ளார்.‌

7 போட்டிகளில்...

ஷர்துல் தாகூர் (6 விக்கெட்), ஜெய்தேவ் உனட்கட், யசுவேந்திர சாஹல் (தலா 5 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய்சங்கர் அணிக்கு உதவிகரமாக இருந்து வருகிறார். வங்காளதேசத்துக்கு எதிராக விளையாடிய அனைத்து 20 ஓவரிலும் (7 ஆட்டம்) இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.

வங்கதேச கேப்டன்...

இந்தியாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் வங்காளதேசம் உள்ளது. இலங்கையை 2 தடவை வென்றதால் அந்த அணி இறுதிப்போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். கேப்டன் சகீப்- அல்-ஹசன் அணிக்கு திரும்பி இருப்பது வங்காள தேசத்துக்கு கூடுதல் பலமே. அந்த அணியில் முஷ்பிகுர் ரகீம் (190 ரன்), தமிம் இக்பால் (134 ரன்), முஷ்டாபிசுர் ரகுமான் (6 விக்கெட்), மகமதுல்லா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இந்தியாவுக்கு எல்லா வகையிலும் வங்காளதேசம் ஈடுகொடுத்து போராடும் என்பதால் இன்றைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து