முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி.யின் பயங்கர முகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது - ராகுல் காந்தி கிண்டல்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜி.எஸ்.டி என்று அறிமுகப்படுத்தப்பட்ட கப்பார் சிங் டேக்ஸின் பயங்கர முகம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவைகள் வரி கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உலகில் மறைமுக வரியை போன்ற வரிகள் குறித்து உலக வங்கி 115 நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் உலகில் 2-வது மிக உயர்ந்த வரி ஜி.எஸ்.டி ஆகும் என்று என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஜி.எஸ்.டி.யானது 5 விதமான ஸ்லாப்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதில் 0 சதவீதம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீம் மற்றும் 28 சதவீதம் ஆகும். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ஜி.எஸ்.டி ஸ்லாப்களில் உள்ள 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகியவற்றை இணைத்து ஸ்லாப்பை குறைப்பேன் என்று உறுதி அளித்திருந்தார். உலக வங்கியின் அறிக்கையை வைத்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கப்பார் சிங் டேக்ஸ் என்பது பயங்கரமானது என்றே உலகம் முழுவதும் பெயர் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து