முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க ஆட்சியின் போது இளைஞர் நலன் பாதுகாக்கப்படவில்லை - உமர் அப்துல்லா குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : ஜம்மு - காஷ்மீரில் பி.டி.பி மற்றும் பா.ஜ.க கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் இளைஞர் நலன் பாதுகாக்கப்படவில்லை என்று மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவருமான உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

மாநில ஆட்சியாளர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகைகளையும், பதவிகளையும் அளிப்பதால் திறமையான இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், ஸ்ரீநகரில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உமர் அப்துல்லா பேசியதாவது,

காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை பெருகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய விவரங்களின்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உரிய பணி வாய்ப்பின்றி இருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய அவல நிலைக்கு ஆளும் பிடிபி - பாஜக கூட்டணி அரேச காரணம். கடந்த மூன்று ஆண்டுகளாக எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மாநில அரசு முன்னெடுக்கவில்லை.

மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலை படுமோசமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. அவற்றை சீர்படுத்தி அமைதியை நிலைநாட்ட மாநில அரசு தவறி விட்டது. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. அவர்களது வேலைவாய்ப்புகளும் கேள்விக்குறியாகியுள்ளன. அரசின் தவறான அரசியல் கொள்கைகளாலும், நடவடிக்கைகளாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து