முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர நிலை பிரகடனத்தை திரும்ப பெற்றார் இலங்கை அதிபர் சிறீசேனா

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்பப் பெற்றார்.

இலங்கையில் சிங்கள பவுத்த மதத்தினர் பெரும்பான்மையாகவும், முஸ்லீம்கள் சிறுபான்மையாகவும் வசித்து வரும் மாவட்டம் கண்டி. இந்த மாவட்டத்தின் தெல்டினியா பகுதியில் முஸ்லிம்களால் கடந்த 22-ம் தேதி தாக்கப்பட்ட பவுத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனையில் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, கண்டி மாவட்டத்தில் பவுத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவமும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து அவசரநிலை பிரகடனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறீசேனா பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து