முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கின் பூர்வீக வீட்டை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ஜனாதிபதி

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர் : ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், மறைந்த அரசியல் தலைவருமான பிஜு பட்நாயக்கின் பூர்வீக வீடான ஆனந்த பவனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ராம்நாத் கோவிந்த் முதன் முறையாக ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அவருடன் மனைவி சவிதா கோவிந்தும் வந்திருந்தார். அவர்கள் இருவரையும் புவனேசுவரம் விமான நிலையத்தில் கவர்னர் எஸ்.சி.ஜமீரும், முதல்வர் நவீன் பட்நாயக்கும் வரவேற்றனர்.

இந்நிலையில், அந்த மாநிலத்தின் கட்டக் நகரில் உள்ள ஆனந்த பவன் என்று அழைக்கப்படும் பிஜு பட்நாயக்கின் வீடு, அருங்காட்சியகம் மற்றும் கல்வி மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆனந்த பவனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஆனந்த பவனை மக்களின் பயன்பாட்டுக்கு அளித்த முதல்வர் நவீன் பட்நாயக்கையும் அவரது குடும்பத்தினரையும் பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், ஆனந்த பவன் கட்டிடமானது ஒரு காலத்தில் சுதந்திரப் போராட்ட உத்திகளை வகுக்கும் மையமாக விளங்கியது. பெண்களின் கண்ணியத்துக்காக வாதாடிய உலகத் தலைவர்களில் பிஜு பட்நாயக்கும் ஒருவர் என்று குறிப்பிட்டார்.

ஆனந்த பவன் கட்டிடம் 2 மாடிகளும் 10 அறைகளும் கொண்டுள்ளது. முன்னதாரக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் அவரது மூத்த சகோதரர் பிரேம் பட்நாயக்கும் தனது பாட்டனார் லஷ்மிநாராயண் பட்நாயக் கடந்த 1900-ம் ஆண்டில் கட்டிய ஆனந்த பவனை ஒடிசா அரசுக்கு கடந்த 2015-ல் தானமாக வழங்கி விட்டனர். 38,000 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டைக் கல்வி நிலையமாக மாற்றும்படி அவர்கள் மாநில கலாசாரத்துறையைக் கேட்டுக் கொண்டனர். அதன்படி ஆனந்த பவன் தற்போது அருங்காட்சியகம் மற்றும் கல்வி நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் பிஜு ஜனதா தளம் பயன்படுத்திய பொருள்களும் அவரது புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து