முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் பதட்டம் ராக்கெட் குண்டு வீசி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

ஜம்மு : காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ராக்கெட் குண்டுகள் வீசி நடத்திய தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம், பாலகோட் பகுதியில் நேற்று காலை பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசி பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குல் நடத்தினர். இந்த  தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினெல் தேவேந்தர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது,

நேற்று காலை 7.45 மணி அளவில் பாலகோட் பகுதியில் உள்ள பிம்பர் காலி பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சவுத்ரி முகமது ரம்ஜான் என்பவரின் வீடு மீது ராக்கெட் குண்டு விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளர், ஒரு பெண், ஒரு சிறுவன், ஒரு சிறுமி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரும் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து