முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலை வழக்கு - குற்றவாளி தாராவுக்கு ஆயுள் தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதல்வர் பேயந்த் சிங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், குற்றவாளி ஜக்தார் சிங் தாராவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சண்டீகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். சித்து தீர்ப்பை வெளியிட்டார். தாரா அடைக்கப்பட்டுள்ள புரைல் சிறைக்கு சென்று நீதிபதி தீர்ப்பை வழங்கினார். அப்போது அவர், தாராவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டமில்லை என்று தாராவின் வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார். முன்னதாக, விசாரணையின்போது தாராவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சி.பி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வெளியிட்டதையொட்டி, புரைல் சிறையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்திருந்தனர்.

சண்டீகரில் கடந்த 1995-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் பேயந்த் சிங் கொல்லப்பட்டார். அப்போது, மேலும் 16 பேரும் பலியாகினர். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பஞ்சாப் காவல்துறையில் பணிபுரிந்த திலாவர் சிங் என்பவர் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீஸார், டெல்லியில் தாராவை கடந்த 1995-ம் ஆண்டு கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

புரைல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தாராவும், மேலும் 2 கைதிகளும் தப்பிச் சென்று விட்டனர். எனினும், தாய்லாந்து நாட்டில் இருந்த போது அவர் 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து