முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் ஆதரவு என்றும் அ.தி.மு.கவிற்கு மட்டுமே உண்டு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்,- மக்கள் ஆதரவு என்றும் அ.தி.மு.கவிற்கு மட்டுமே உண்டு என்று விருதுநகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
விருதுநகர் ஒன்றிய கழகம் சார்பாக விருதுநகர் ரயில்வே காலனியில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள்விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய கழக அவைத்தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் முகமதுநெய்னார், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் டி.பி.எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கழக செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமை கழக பேச்சாளர் கவிமுரசு அல்லி கண்ணன், கோடையிடி சுப்பையா, முத்துராமலிங்கம், சரவெடி சம்சுகனி, பழனிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது,
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் 101-வது பிறந்தநாள் விழா, ஜெயலலிதா 70-வது பிறந்தநாள் விழா என்று சொன்னால் நம்ப முடியவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைந்தாலும் அவர்களின் புகழ் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்றைக்கு ஜெயலலிதாவின் புகழ் பற்றி பொதுமக்கள் பேசி வருகின்றனர். அம்மா இருந்தால் இப்படி நடக்குமா, அம்மா இருந்தால் ஆளாளுக்கு கட்சி ஆரம்பித்து இருப்பார்களா, கட்சி ஆரம்பிக்க இவர்களுக்கு எல்லாம் தைரியம் வந்திருக்குமா என்ற செவிவழி பேச்சு நாம் காதுகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. எம்.ஜி.ஆர் இறந்து விட்டார் கட்சி இனி அவ்வளவுதான் என்று கருணாநிதி போன்றோர் கணக்கு போட்டனர். அன்றைக்கு அண்ணா தி.மு.கவை காப்பாற்ற நான் இருக்கின்றேன் என்று சொல்லி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்தார். ஜெயலலிதா மறைந்த போது ஒன்றறை கோடி தொண்டர்கள் சென்னைக்கு வந்து அஞ்சலி செலுத்தனர். அப்போதும் சிலர் கூறினர்.  ஒன்றறை கோடி தொண்டர்களின் சிம்மாசனம் சரிந்து விட்டது, இனி இயக்கம் அழிந்து விடும், அண்ணா தி.மு.க அடையாளம் முடிந்தது என்று சில பேர் கணக்கு போட்டார்கள். முரசொலியில் கடிதம் எழுதினார்கள். இனி முதலமைச்சர் நாற்காலி நமக்குதான் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். ஆனால் அம்மாவால் அடையாளம் காணப்பட்ட தலைவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
2011முதல் அமைச்சராகவும், விருதுநகர் மாவட்ட கழக செயலாளராகவும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன். ஜெயலலிதாவை அடிக்கடி சந்தித்து பேசியுள்ளேன். அப்போது கட்சி பணி, ஆட்சி பணி குறித்து எதுவும் வேலை என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை பார்த்து பேச சொல்வார். அம்மா இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை அடையாளம் காண்பித்து விட்டு சென்றுள்ளார். இருபெரும் பெயர்களைதான் ஜெயலலிதா அவர்கள் அடிக்கடி உச்சரித்து அவர்களை அடையாளம் காண்பித்தார். ஜெயலலிதா நினைத்தது போன்று கட்சியையும், ஆட்சியையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சிறப்பாக வழிநடத்தி செல்கின்றனர். இரட்டை இலை சின்னம் பத்திரமாக உள்ளது. அண்ணா தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இன்று பத்துபேர் கட்சி ஆரம்பிக்க கிளம்பியுள்ளனர். நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து வருகின்றனர். எம்ஜிஆர் சம்பாதிக்கும் பணத்தை ஏழைகளுக்கு வழங்கினார். மக்கள் பணியாற்றிய புரட்சித்தலைவர் எங்கே, மக்கள் பணி என்றால் என்னது என்று தெரியாத கமல்ஹாசன் எங்கே. குண்டுகள் துளைத்த நேரத்தில் புரட்சித்தலைவரின் புகைப்படத்தை வைத்து ஓட்டு கேட்டு அண்ணா முதல்வரானார் என்பதுதான் வரலாறு. ஒன்றுமே செய்யாமல், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்து விடலாம் என்று சிலரின் கனவு கானல் நீராகதான் இருக்கும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருபெரும் தலைவர்கள் கழகத்தையும் ஆட்சியையும் தங்களது கரங்களில் கச்சிதமாக வைத்துள்ளனர். இருபெரும் தலைவர்கள் கள்ளங்கபடம் இல்லாத தலைவர்களாக எங்களுக்கு காட்சியளிக்கின்றனர். உண்மையை சொல்லி ஆட்சி, கட்சி நடத்துகின்றனர். கட்சியும் ஆட்சியும் இரு கண்களாக ஓடிக்கொண்டிருகின்றது. எந்த பிரச்சனைக்கும் இடம் கிடையாது. அண்ணா தி.மு.கவை அழிக்க யாரும்பிறக்கவும் இல்லை, இனி ஒருவன் பிறக்க போவதும் கிடையாது. எங்களை போன்ற தொண்டர்களை ஜெயலலிதா அவர்கள் உரமிட்டு வளர்த்துள்ளார். இருபெரும் தலைவர்களை அடையாளம் காண்பித்துவிட்டு சென்றுள்ளார். ஒன்றறை கோடி தொண்டர்கள் இரும்பு சக்கரத்தில் பூட்டிய வீல்போல் உள்ளனர். அண்ணா தி.மு.க என்ற இயக்கம் எங்களது நாடி நரம்புகளில், ரத்தநாளங்களில் கலந்து விட்ட ஒன்று. இதை யாரும் அழிக்க முடியாது. அ.தி.மு.கவிற்கு என்று வரலாறு உண்டு. இன்று கூட்டம் யார் வேண்டுமானாலும் சேர்க்கலாம். விருதுநகரில் உள்ள தொழில் அதிபர்கூட தன்னிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு கூட்டம் சேர்த்து கூட்டம் நடத்த முடியும். அடிமட்ட தொண்டன், சாதாரண, சாமானிய மக்களின் அடித்தளத்தில் இதயத்தில் வாழ்க என்ற கோஷம் இரட்டை இலைக்கு மட்டும்தான் உண்டு. ஒரு இலையில் புரட்சித்தலைவரையும் இன்னோறு இலையில் புரட்சித்தலைவியையும் வைத்து அழகுபார்த்த மக்கள் தமிழக மக்கள். இன்றைக்கும் கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு தனிமவுசு உண்டு. எம்ஜிஆர் வாழ்க, அம்மா வாழ்க, இரட்டை இலை சின்னம் வாழ்க என்று சொல்லிக்கொண்டே வாழ்ந்தவர்கள் நாங்கள்.. அம்மாவின் சாதனைகளை சொல்லி சொல்லி வாழ்ந்தவர்கள் நாங்கள். இந்த இயக்கம் சாதாரண மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு அழிவு என்பதே கிடையாது. தமிழகத்தில் ஏராளமான வளர்ச்சி தி்ட்ட பணிகளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,  அம்மா அவர்கள் செயல்படுத்தினர். ஜெயலலிதாவின் கனவு திட்டமான ஆண்டிற்கு ஒருலட்சம் பெண்களுக்கு ரூ25ஆயிரம் மாணியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் தி்ட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். காவேரி பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வெற்றிபெற்றவர் ஜெயலலிதா அவர்கள். காவேரி பிரச்சனையில் ஒரு துரம்பைகூட அள்ளி போடாதவர் கருணாநிதி. காவேரி மேலாண்மை அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையில் தி.மு.க நாடகம் போடுகின்றது. தி.மு.கவை மக்கள் வெறுத்து விட்டனர். அவர்கள் ராஜினாமா செய்து விட்டு செல்வதுதான் அவர்களுக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது. கழகத்தில் பிரச்சனை இருந்த போதிலும் எந்த அதிமுக தொண்டனும் தி.மு.கவிற்கு செல்லவில்லை. தற்போது கழகத்தில் இருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இரட்டை இலை சின்னம், கட்சி எங்கு இருக்கின்றதோ அங்குதான் உண்மையான கட்சியினர் இருப்பார்கள். மக்கள் நலன் ஒன்றே தாரக மந்திரம் என்ற அடிப்படையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு பொதுமக்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் தர்மா(எ)தர்மலிங்கம், அர்ச்சுனாபுரம் கிளைசெயலாளர் பரணிமாரிமுத்து, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மற்றும் கட்சியின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் மூக்கையா சிறப்பாக செய்திருந்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து