முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை செந்தழிழ்கல்லூரியின் வைரவிழா கவியரங்கம் - நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      மதுரை
Image Unavailable

மதுரை மதுரை செந்தழிழ் கல்லூரியின் வைரவிழாவில் கவியரங்கம் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் செந்தமிழ்க் கல்லூரி வைரவிழா மார்ச் 17, 18 ஆகிய நாட்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  இரண்டாம் நாள் நிகழ்வாக நேற்று காலை(18.03.2018) 10.00மணியளவில் பேராசிரியர்முனைவர் அப்துல்காதர் தலைமையில் “வற்றாத நீரோட்டங்கள்” என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.  பிற்பகலில் சென்னை லயோலா கல்லூரி கலை இலக்கிய ஊடகத்துறை பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் “மாற்று ஊடக மையம்” மாணவர்கள் வழங்கிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற நிறைவுவிழாவில் முனைவர் வீ.காந்திமதி  எழுதிய “நான்காம் தமிழ்ச்சங்கம் - வரலாறும் பணிகளும்” என்ற நூல் வெளியிடப்பட்டது.  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்;தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி நூலை வெளியிட, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை நூலின் முதல்பிரதியைப் பெற்றுச் சிறப்புரை ஆற்றினார்.  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் முனைவர் ஜி.பாஸ்கரன் விழா நிறைவுப் பேருரையாற்றினார்.  கல்லூரிச் செயலர் இராணி ந.இலட்சுமிகுமரன்சேதுபதி , சங்கச்செயலர் வழக்கறிஞர் ச.மாரியப்பமுரளி முன்னிலை வகித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து