முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம் 22-ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

திருவில்லிபுத்தூர், -உலக பிரசித்தி பெற்ற திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் வரும் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் வரும் 30-ம் தேதி நடக்கிறது.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திவ்ய தேசமாகும். இந்த ஆண்டு ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா வரும் 22-ம் தேதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து காலை, இரவு வேளைகளில் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் திருக்கல்யாணம் வரும் 30-ம் தேதி காலை 7 மணிக்கு ஆண்டாளும், ரங்கமன்னாரும் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆண்டாள் கோட்டை தலைவாசல் சென்று மரியாதை பெறும் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு ரெங்கமன்னார் வீதியுலாவும், மாலை 6.25 முதல் இரவு 7.25 மணிக்குள் ஆண்டாள் சன்னதி முன்புள்ள பிரம்மாண்டமான பந்தலில் ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு விருந்து வழங்கப்படுகிறது. திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிசந்திரன், சிவகங்கை இணை ஆணையாளர் செந்தில்வேலவன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோவில் அலுவலர்களும், திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து